சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அரசுடன் இணைக்க தீவிர முயற்சி
அரசில் இணைந்து செயற்படுகின்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களே சுதந்திரக் கட்சியை முழுமையாக அரசுடன் இணைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசில் இணைவதற்குத் தயாசிறி முழுமையாகத் தடையாக இருந்தமையாலேயே அவர் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
குறித்த செய்தியில் மேலும் கூறியுள்ளதாவது, “அரசில் இணைந்து செயற்படுகின்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்களே சுதந்திரக் கட்சியை முழுமையாக அரசுடன் இணைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
சுதந்திரக் கட்சி அரசில் இணைவதற்குத் தயாசிறி முழுமையாகத் தடையாக இருந்தமையாலேயே அவர் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்று சுதந்திரக் கட்சி வட்டாரம் கூறுகின்றது.
அரசில் இணைந்துள்ள சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைவதாக இருந்தால் அரசில் இருந்து விலகி வர வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார் தயாசிறி முழு சுதந்திரக் கட்சியும் அரசுடன் இணைக்கும் முயற்சியில் இருக்கும்போது அரசை விட்டு எப்படி விலகுவர்? மைத்திரிபால ஆரம்பத்தில் தயாசிறியின் மேற்படி நிலைப்பாட்டில்தான் இருந்தார்.பின்னர் மாறிவிட்டார்.
அதற்குக் காரணம் அரசுடன் உள்ள சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மைத்திரியைச் சந்தித்து மேற்கொண்ட மூளைச்சலவைதான் என்று சொல்லப்படுகின்றது.
அவர்களின் அழுத்தம் காரணமாகவே தயாசிறியும் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து மைத்திரியால் நீக்கப்பாட்டார்” என கூறப்பட்டுள்ளது.