புதிய அம்சங்களுடன் வட்ஸ்அப்!
உலகலாவிய ரீதியில் அதிகளவு பயனர்களை கொண்ட செயலியாக விளங்குகின்ற வட்ஸ்அப், தற்போது அடுத்த கட்டத்திற்கு தன்னை முன்னேற்றியுள்ளது, பயனர்களுக்கு ஏராளம் நன்மைகளை வழங்கும் வகையில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய அம்சங்கள் பயனாளர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த புதிய அம்சங்கள் ஐஓஎஸ்(IOS) மற்றும் அன்ரொய்ட் (Android) ஆகிய இரண்டிலும் பயன்பாட்டிலுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சங்களாவன,
- அனுப்பிய செய்திகளை திருத்துதல்
- பெயரின்றி குழுக்களை ஆரம்பித்தல்
- திரையை பகிரும் அமைப்பு
- HD புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்தல்
- பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ளல்
பயனர்கள் ஏற்கனவே அனுப்பிய செய்திகளை திருத்துவதற்கு WhatsApp இப்போது அனுமதிக்கிறது.
ஒரு செய்தியை அனுப்பிய பிறகு, அதைத் திருத்த 15 நிமிடங்களுக்கு ஒரு சாளரம் கிடைக்கும்,அதனை பயன்படுத்தி, அனுப்பிய செய்திகள் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் போன்றவற்றினை திருத்திக்கொள்ள முடியும்.
அனுப்பிய செய்தியைத் திருத்த, நீங்கள் திருத்த வேண்டிய செய்தியைத் தட்டிப் பிடிக்கவும் > விருப்பங்களுடன் ஒரு பாப்அப் தோன்றும் > “திருத்து” பொத்தானைத் தட்டவும், அது மீண்டும் தட்டச்சு செய்வதற்கான உரைப்பெட்டியை உங்களுக்கு வழங்கும்.
அதில் தேவையான திருத்தங்களை உள்ளீடு செய்து திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.
பயனர்கள் இப்போது பெயரின்றி குழுக்களை உருவாக்கலாம் என்று வட்ஸ்அப் அறிவித்துள்ளது.
பயனர்கள் ஒரு குழுவை அவசரமாக தொடக்க வேண்டியிருக்கும் நிலையில் உடனடியாக பொருத்தமான பெயர்கள் நினைவுக்கு வராத போது குழுக்களை உருவாக்குவதில் ஏற்படுகின்ற சிக்கல்களை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, குழுவுக்கு பெயரிடப்படாதவிடத்து குழுவை துவக்கி வைத்தவர்களின் பெயர்கள் குழுவின் பெயரில் இடம் பெரும் அதனை வைத்து குழுக்களை இனங்கண்டு கொள்ளலாம், இது குழு அட்மின் மாற மாற குழுவின் பெயரும் மாறுவதை போல இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இனிமேல் பயனர்கள் வட்ஸ்அப் இல் வீடியோ அழைப்புகளில் இணையும் போது பயனர்கள் தங்கள் திரையைப் பகிரலாம் – பெரிதாக்குதல் (ZOOM) போன்றவற்றை நிகழ்த்த முடியும்.
வட்ஸ்அப்பை அணுக எந்த பிளாட்ஃபார்மைப் பயன்படுத்தினாலும் இந்த அம்சத்தைப் பயன்படுத்தக்கூடியவாறு இந்த அமைப்பு வடிவமைக்கபட்டுள்ளது.
இனிமேல் வேலை சம்மந்தப்பட்ட கூட்டங்களை நடாத்துவதற்கு ZOOM,MSTeams போன்ற செயலிகளிற்கு பதில் வட்ஸ்அப் மூலமாகவே அனைத்தையும் நிறைவேற்ற முடியும் என்று மெட்டா தெரிவிக்கிறது.
வட்ஸ்அப் திரையைப் பகிர்வதற்கு, முதலில் வீடியோ அழைப்பைத் தொடங்க வேண்டும் மற்றும் திரையின் அடிப்பகுதியில் காணப்படும் “பகிர்” ஐகானைத் தட்டுவதன் மூலம் பயனர்கள் தங்கள் திரையை பகிர்ந்துகொள்ள முடியும்.
HD புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை கூட இனி வட்ஸ்அப் மூலம் அனுப்ப முடியும்.
அதற்கு பயனர்கள் முதலில் அரட்டையைத் (Chat) திறக்க வேண்டும் > இணைப்பு ஐகானைத் தட்டவும் (Link Icon)> நீங்கள் அனுப்ப வேண்டிய புகைப்படங்களைத் தேர்ந்தெடுக்கவும் > “HD” பொத்தானைத் தட்டி அனுப்பவும்.
வட்ஸ்அப்பில் HD காணொளியினை அனுப்புவதற்கும் இதே செயல்முறையையே பின்பற்ற வேண்டும்.
இவை தவிரவும் யாருமே எதிர்பாராத புதிய அம்சம் ஒன்றையும் வட்ஸ்அப் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே வட்ஸ்அப்பில் பெமேண்ட் (Payment) என்ற ஆப்ஷன் உள்ளது. இதில் பயனர்களின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது வட்ஸ்அப்பில் யுபிஐ செயலிகள் அறிமுகமாகிறது. அதாவது, கூகுள் பே, போன் பே, பேடிஎம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகள் மூலம் வாட்ஸ் அப்பில் பணப் பரிமாற்றம் செய்து கொள்ளும்படியான அம்சம் வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஏற்கனவே இந்த அம்சம் சிங்கப்பூர் மற்றும் பிரேசிலில் ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.