News

மின்சார கட்டண திருத்தம் அவசியம்: கஞ்சன விஜேசேகர விளக்கம்

மின்சார உற்பத்தியில் ஏற்படும் செலவை ஈடுகட்ட மின்சார கட்டண திருத்தம் அவசியம் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அதிக உற்பத்திச் செலவு காரணமாக களனிதிஸ்ஸ அனல் மின்நிலையம் செயற்பாட்டில் இருந்து அகற்றக்கப்பட வேண்டும் எனறும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 2020 ஆம் ஆண்டிலேயே மின் நிலையம் அகற்றப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அது செய்யப்படவில்லை.

களனிதிஸ்ஸ நிலையத்தில் ஒரு அலகு மின்சார உற்பத்திக்கான செலவு 144 ரூபாயாக உள்ளது.

சூரிய மற்றும் காற்றாலை மூலம் 4700 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களுக்கு கேள்விப்பத்திரங்கள் கோரப்படவுள்ளன. இது மின்சாரக் கட்டணத்தை குறைக்க உதவும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விக்டோரியா, ரன்தம்பே, ரந்தெனிகல மற்றும் ஏனைய நீர்த்தேக்கங்களில் நீர் மின் உற்பத்தியை ஆரம்பிக்க போதுமான மழை பெய்யவில்லை.

இந்தநிலையில் மின்சார உற்பத்தியில் ஏற்படும் செலவை ஈடுகட்ட மின்சார கட்டண திருத்தம் அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button