News

காலாவதியான மருத்துவ உபகரணங்களை மாற்றுவதில் சுகாதார அமைச்சு திண்டாட்டம்

அரச மருத்துவமனைகளில் காலாவதியாகியிருக்கும் மருத்துவ உபகரணங்களை மாற்றுவதில் கடும் நெருக்கடியினை சந்தித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச மருத்துவமனைகளில் இருக்கும் மருத்துவ உபகரணங்களின் ஆயுட்காலம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் காலாவதியாகிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

CT ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், லீனியர் ஆக்சிலரேட்டர்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் மயக்க மருந்து இயந்திரங்கள் உள்ளிட்டவை கடந்த 2019 ஆம் ஆண்டு காலாவதியாகி விட்டதாகவும்.

நிதிப் பற்றாக்குறை மற்றும் தொற்றுநோய்களின் போது சில மருத்துவ உபகரணங்களின் அவசியம் அதிகளவில் இருந்ததன் காரணத்தால் அவை இன்றளவும் மாற்றப்படாமல் இருப்பதாகவும் நிதியமைச்சு தெரிவிக்கின்றது.

அரச மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்களை பழுதுபார்ப்பதற்கும் மாற்றுவதற்கும் ஆண்டொன்றுக்கு குறைந்தது 30 பில்லியன் ரூபாய் தேவைப்படுகிறது.

காலாவதியான உபகரணங்கள் இன்றளவும் மாற்றப்படாமல் இருப்பதால் இப்போது,  இந்த காலாவதியான மருத்துவ உபகரணங்களை மாற்றுவதற்கு ஆரம்ப தொகையாக 67 பில்லியன் ரூபா தேவையாக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக சுகாதார அமைச்சகம் நிதி பற்றாக்குறையை எதிர்கொண்டதனால் அவற்றை மாற்றக்கூடிய சூழல் உருவாகவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

சுகாதார அமைச்சு இந்த பிரச்சினைகளை முன்மொழிவு வடிவில் நிதியமைச்சகத்துக்குத் தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலளித்த, நிதியமைச்சு தேவையான நிதியில் ஒரு பகுதியை இப்போது வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

மிகுதி நிதியினை அடுத்த ஆண்டு (2024) பாதீடில் ஒதுக்கப்படும் நிதியில் வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button