அதிபர் பற்றாக்குறையை தவிர்க்க 4718 புதிய நியமனங்கள்
நவம்பர் மாத ஆரம்பத்தில் 4718 புதிய அதிபர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – மல்லாவி தேசிய பாடசாலையில் இடம்பெற்ற விவசாய கண்காட்சியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், அதிபர் பற்றாக்குறையை தவிர்ப்பதற்காக இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கூறியுள்ளார்.
ஆசிரியர் கல்விச் சேவையில் 705 வெற்றிடங்களும், கல்வி நிர்வாக சேவையில் 405 வெற்றிடங்களும் நிரப்பப்படவுள்ளதாகவும், ஆசிரியர் ஆலோசகர் சேவையில் உள்ள முரண்பாடுகள் தீர்க்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கல்வி முறையின் மனித வள குறைபாடுகள் அடுத்த ஜனவரி மாதத்திற்குள் படிப்படியாக பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், கல்வி மாற்றத்தில் கட்டமைப்பு மாற்றங்களுக்கு அனைவரும் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.