News

கொழும்பில் ஆபத்தான நிலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் கண்டுபிடிப்பு

கொழும்பு மாவட்டத்தில் ஆபத்தான நிலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 8 கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 27 கட்டடங்களை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

அதில் ஆபத்தான நிலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 8 கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ஆசிரி கருணாவர்தன குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஆய்வக பரிசோதனையின் பின்னர் உரிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button