News

அதிபரின் சீன விஜயம் : பதில் அமைச்சர்கள் நியமனம்

ரணில் விக்ரமசிங்க, அதிபராக பதவியேற்றதன் முதல் தடவையாக சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சீனாவில் நடைபெறவுள்ள ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் 3ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு(14) சீனாவுக்கு பயணமாகியுள்ளார்.

இதன்படி, அதிபர் இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் சீனாவில் தங்கியிருப்பார் என அதிபர் ஊடப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன அரசாங்கத்துடன் அதிபர் கலந்துரையாடவுள்ளார். அதிபரின் சீன விஜயத்தின் போது, சீனாவின் பல உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதிபர் சீனா விஜயத்தில் ஈடுபடும் காலப்பகுதியில், அவர் வசம் உள்ள அமைச்சுகளின் பொறுப்புகள் இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று முதல் இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், பாதுகாப்பு பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நிதி பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராகவும், வன வள பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் துறை பதில் அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button