News

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கம்

இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையினால் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதையடுத்து சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளது.

பொதியிடப்படாத வெள்ளைச் சீனி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச சில்லறை விலையாக 275 ரூபா நிர்ணயிக்கப்பட்டதுடன், பொதியிடப்பட்ட வெள்ளை சீனி ஒரு கிலோகிராமின்விலை 295 ரூபா என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோன்று பொதியிடப்படாத சிகப்பு சீனி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச சில்லறை விலையாக 330 ரூபா நிர்ணயிக்கப்பட்டதுடன், பொதியிடப்பட்ட வெள்ளை சீனி ஒரு கிலோகிராமின்விலை 350 ரூபா என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் நீக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button