News
		
	
	
2024 ஆம் ஆண்டு இரண்டு தேர்தல்கள்

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் கண்டிப்பாக நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி. எதிராக வாக்களித்தவர்களுக்கும் நன்றி.”
“அடுத்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் இரண்டையும் நடத்துவேன். அதன் பிறகு ஏனைய தேர்தல்களை நடத்துவேன்.”
“எக்காரணம் கொண்டும் தேர்தல்கள் பிற்போடப்பட மாட்டாது என்றார்”.




