News
தெற்கு பசிபிக் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
தெற்கு பசிபிக் பகுதியில் 7 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வனுவாட்டு பகுதியில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.