குழந்தைகளிடையே பரவும் புதிய நோய்த்தொற்று : எச்சரிக்கும் வைத்தியர்கள்!
பள்ளி மாணவர்களிடையே கை, கால் மற்றும் வாய் நோய் (HFMD) பரவுவது அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக இந்த நோய்ப்பரவல் சிறுவர்களிடையே அதிகரித்து வருகின்றது.
குழந்தைகளின் உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் சிறிய, வெள்ளை கொப்பளங்கள் போன்ற அறிகுறிகள் இருந்தாலோ, அதே போல் வாயில் பழுப்பு நிற தொப்பளாங்கால், சிவப்பு தோல் வெடிப்பு போன்ற அறிகுறிகள் தோன்றினால் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த நோய் அறிகுறிகள் தோன்றும் பொது குழந்தைகளுக்கு சின்னம்மை நோய் இருத்தல் ஆகாது, குழந்தைகள் சின்னம்மை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் HFMD நோய்த் தொற்று குழந்தைகளின் உடல் நிலையினை மேலும் மோசமாக்கலாம்.
HFMD யானது பொதுவாக காக்ஸ்சாக்கி வைரஸால் ஏற்படுகிறது, இந்த HFMD பொதுவாக கொப்புளங்களுக்குள் இருக்கும் திரவம் அல்லது தும்மல் மற்றும் இருமல் ஆகியவற்றிலிருந்து பரவலடைகின்றது.
இந்த நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாப்புப்பெறுவதற்கும் குழந்தைகளுக்கு தொற்று பரவாமல் தடுப்பதற்கும் குழந்தைகளுக்கு முகக் கவசங்களை வழங்கி கை, கால்களை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
மேலும், இந்த நோய்க்கான அறிகுறிகள் இருந்தால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகள், தினப்பராமரிப்பு மையங்கள் அல்லது பொது இடங்களுக்கு அனுப்புவதனைத் தவிர்க்க வேண்டும்.”என அவர் தெரிவித்தார்.