இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளித்த நிதியுதவி!
எதிர்காலத்தில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளின் அபாயத்தைக் குறைக்கவும், உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை நிலைநாட்டவும் சுற்றுப் பொருளாதார நடைமுறைகள் அதிகளவில் பங்களிப்புச் செய்யும் என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மோரேனோ கார்மென் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் (EU) இலங்கையின் உணவுத் துறையில் நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நிதியுதவி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த உடன்படிக்கையின் படி, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு கிடைப்பதற்காக 15 மில்லியன் யூரோ நிதியுதவியினை வழங்கவுள்ளது.
இந்த ஒப்பந்தமானது 2021 ஆம் ஆண்டின் புதுப்பிக்கப்பட்ட தேசிய பங்களிப்புகள், நிலையான நுகர்வு மற்றும் உற்பத்திக்கான தேசிய கொள்கையின் நடைமுறையின் கீழ் இலங்கையின் உறுதிமொழிகளுக்கும் பங்களிக்கும்.
இந்த நிதியுதவியில் வாயிலாக, இழப்புக்களைக் குறைத்தது, பாதிப்புக்குள்ளான நுகர்வோர், மற்றும் உணவு உற்பத்தியாளர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படவுள்ளது.
உணவுப் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் நுகர்வு ஆகியவற்றின் செயற்திறனை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
மேலும், வளப் பற்றாக்குறையிலிருந்து சூழலைப் பாதுகாக்க இலங்கை எதிர்கொள்கின்ற சவால்களை சவால்களை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதுமாத்திரமல்லாமல் புதிய தொழில்நுட்பங்கள், வணிக மாதிரிகள் மற்றும் தொழில்முனைவு மற்றும் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியை மாற்றியமைக்கக்கூடிய ஒரு வட்டப் பொருளாதார மாதிரியை உருவாக்குவதன் வாயிலாக, செழிப்பான பொருளாதாரத்தை வளர்க்க முடியும்.” என அவர் தெரிவித்தார்.