சுற்றுலா பயணிகளிடம் அறவிடப்படவிருந்த பணம்: அமைச்சர் எடுத்த தீர்மானம்
வெளிநாடுகளில் இருந்து காலி கோட்டைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளிடமிருந்து பணம் அறவிடுவதற்கு அனுமதி வழங்கப்படாது என சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
காலி கோட்டை சுதர்மாலய விகாரையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
காலி கோட்டைக்குள் வருகைதரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து 15 டொலர்களை வசூலிக்க காலி ஹெரிடேஜ் அறக்கட்டளை தீர்மானித்திருந்த நிலையில் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், குறித்த தீர்மானத்திற்கு எதிராக காலி கோட்டை வாசிகள் மற்றும் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களும் போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, பிரதேசவாசிகள் மற்றும் வர்த்தகர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்றை நேற்று(25) நடத்தியதுடன் சுற்றுலா பயணிகளிடமிருந்து பணம் அறவிடுவதற்கு அனுமதி என குறிப்பிட்டுள்ளார்.