News
		
	
	
SLC வழக்கு மீண்டும் இன்று.!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி, அதன் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால கட்டுப்பாட்டு குழுவை நியமித்த விளையாட்டுத்துறை அமைச்சரின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக பரிசீலனை இன்று எடுத்துக்கொள்ளப்படவுள்ளது .
இந்த மனுவை நேற்று (27) சோபித ராஜகருணா மற்றும் டி.என். சமரகோன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் மீண்டும் பரிசீலனை செய்யப்பட்டது.
குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை கிரிக்கட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட இடைக்கால குழு உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றில் தகவல்களை முன்வைத்தார்.
இதனை அடுத்து, அடுத்த கட்ட விசாரணை இன்று ஆரம்பமாகவுள்ளது.




