News

அரச ஊழியர்களுக்கு நற்செய்தி!

அரச ஊழியர்களுக்கு நற்செய்தி | Government Employee Government Staffs Salary

அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு சில பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரைகளை முன்வைத்திருந்தாலும் அரசாங்கம் என்ற ரீதியில் இதுபற்றிய முடிவு எதனையும் அரசாங்கம் இன்னமும் எடுக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த நேர்காணல் 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் செஹான் சேமசிங்கவிடம் பல கேள்விகள் கேட்க்கப்பட்டன.

இதன்போது அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கம் எதுவும் அரசுக்கு உள்ளதா?என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், “ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு சில பொருளாதார வல்லுநர்கள் அதற்கான பரிந்துரைகளை முன்வைத்திருந்தாலும் அரசாங்கம் என்ற ரீதியில் இதுபற்றிய முடிவு எதனையும் அரசாங்கம் இன்னமும் எடுக்கவில்லை.

சுகாதாரத் திணைக்களத்தில் அத்தியாவசியப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு குறைவாகவே உள்ளது. அரசின் செலவினங்கள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன.

2025 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதத்தை இலக்காகக் கொண்டு, வருவாயை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மிகவும் வலுவான மற்றும் பயனர்களுக்கு நட்பான நடைமுறையை அறிமுகப்படுத்தி வரி வலையை விரிவுபடுத்த முயற்சிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button