இலங்கையில் அறிமுகமாகவுள்ள கேபிள் கார் பயணம்!
இலங்கையில் முதலாவது கேபிள் கார் பயணம் மத்திய மலைநாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள பல்லுயிர் பெருக்க வளாகம் மற்றும் இலங்கையின் முதலாவது பல மத சங்கம இடமாக விளங்கும் அம்புலுவாவவில் இலங்கையின் முதலாவது கேபிள் கார் பயண அனுபவத்திற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதற்கான ஒப்பந்தமும் அம்பர் அட்வென்ச்சர் நிறுவனத்துடன் அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை அறிவித்துள்ளது.
இலங்கையில் அமைக்கப்படவுள்ள இந்த முதலாவது கேபிள் காரானது சீனாவின் சர்வதேச கட்டட இயந்திர கூட்டுத் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு நிபுணத்துவத்தினைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் இலங்கை முதலீட்டுச் சபை அறிவித்துள்ளது.
மேலும், இந்தத் திட்டத்திற்காக சுமார் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.