நாடாளுமன்றத்தில் நேர முகாமைத்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்: பிரசன்ன ரணதுங்க
கடந்த இரண்டு வார காலத்தில், நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு மேலதிகமாக 200 நிமிடங்களை எதிர்க்கட்சித் தலைவர் பயன்படுத்தியுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்தில் நேரத்தை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நவம்பர் 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையில் அலுவல்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு மேலதிகமாக 552 நிமிடங்களை பயன்படுத்தியுள்ளனர்.
அதேநேரம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதில் 204 நிமிடங்களை பயன்படுத்தியுள்ளார் என்று பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று காலையும் நாடாளுமன்ற உறுப்பினர்களால், அலுவல்களுக்கு புறம்பான விடயங்களுக்காக 50 நிமிடங்கள் வீணடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.