News
		
	
	
22,000 ஆசிரியர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
குறித்த வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஆசிரியர்கள் ஓய்வுபெற்றமையினால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்குரிய பாடங்களுக்கான ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைகளின் கீழ் காணப்படும் பாடசாலைகள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் கீழ் காணப்படும் பாடசாலைகளுக்காக இவ்வாறு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பாடசாலை தவணையின் போது ஆட்சேர்ப்பு நடவடிக்கையை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.




