News

இலங்கை மாணவர்களுக்கு ஜப்பானில் தொழிற் பயற்சி

இலங்கையின் பல்கலைக்கழகங்களில் விவசாயம் சார்ந்து கற்கும் மாணவர்களுக்கு ஜப்பானில் உள்ள மூன்று உயர்கல்வி நிறுவனங்களில் தொழில் பயிற்சியை வழங்க ஜப்பானின் ஆசிய மனிதவள வங்கி இணங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாயம் மாத்திரமன்றி பெருந்தோட்ட பயிர்களை கற்கும் மாணவர்களுக்கும் இந்த பயிற்சியை வழங்குமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பயிற்சியின் போது மாதாந்த உதவித்தொகையாக ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 960 யென் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இலங்கை ரூபாயில் 3 இலட்சத்து 28 ஆயிரத்து 341 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு வருட கால பயிற்சியின் போது ஊதியம், உணவு மற்றும் தங்குமிட வசதிகள் மற்றும் விமான பயணச்சீட்டுக்களை இலவசமாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜப்பானிய மொழியில் மேம்பட்ட பயிற்சிகளை வழங்குவதாகவும், ஜப்பானிய பண்ணைகளில் மேம்பட்ட தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவதாகவும் ஜப்பானிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button