News

முதன்முறையாக ஐபிஎல் ஏலத்தை நடத்தப்போகும் இந்திய பெண்

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தை இந்தியாவை சேர்ந்த மல்லிகா சாகர் என்ற பெண் முதன்முறையாக நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் 19ஆம் திகதி டுபாயில் உள்ள கோகோ கோலா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஏலத்தை எட்மெடாஸ் நடத்தியதோடு இம்முறை ஐபிஎல் ஏலதாரராக பெண் ஒருவரை ஐபிஎல் நிர்வாக குழு நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மும்பையை சேர்ந்த மல்லிகா சாகர் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் ஏற்கனவே 2021ஆம் ஆண்டு முதல் ப்ரோ கபடி லீக் ஏலத்தில் நடத்தி வருவதோடு மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தையும் நடத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

2001ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏல நிறுவனத்தில் தனது பயணத்தை தொடங்கிய அவர், ஐபிஎல் ஆடவர் தொடருக்கான ஏலத்தை நடத்தும் முதல் பெண்ணாக சாதனை படைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக ஐபிஎல் ஏலத்தை நடத்தப்போகும் இந்திய பெண் | First Woman To Conduct Ipl Auction

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button