வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்டேட்!
வாட்ஸ் அப் நிறுவனமானது பல புதிய அப்டேட்டைகளை நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் வாட்ஸ் அப் ஒரே நேரத்தில் 32 பேர் வரை பேசலாம் என்ற புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப் அண்மையில் வாட்ஸ் அப் செனல், வாட்ஸ் அப் communuity போன்ற புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் தற்போது ஒரே நேரத்தில் 32 பேர் வரை பேசக்கூடிய ஓடியோ சாட் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய அம்சத்தில் குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு மணி ஒலிக்காமல், அதற்கு பதிலாக PUSH NOTIFICATION என்ற அழைப்பு முறை அனுப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓடியோ சாட்டில் உறுப்பினர்கள் இணைந்த பிறகு, குழுவினரால் நேரடியாகவும், குறுஞ்செய்தி அனுப்பவும் முடியும்.
மேலும், ஓடியோ சாட் குழுவில் 33 முதல் 128 பேர் வரையிலான உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே இந்த ஓடியோ சாட் வசதியை பயன்படுத்த முடியும்.
இந்த ஓடியோ சாட் வசதியை அண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் ஆகிய 2 தளங்களிலும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.