News
ஐ.எம்.எப் இடம் இருந்து சாதகமான பதில்! 12ஆம் திகதிக்கு பிறகு கிடைக்கும் நிதி
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான இரண்டாம் கட்ட கடன் உதவி எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு பின்னர்கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் வெளிவிவகார அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போது அலிசப்ரி இவ்வாறு தெரிவித்தார்.
அந்த கடன் தொகை மூலம் நாடு திவால் நிலையில் இருந்து காப்பாற்றப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வெளிநாடுகளின் தாக்கங்களுக்கு அமைய, இலங்கையின் இறையாண்மைக்கு துரோகமிழைக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க அரசாங்கம் ஆயத்தமாக இல்லை எனவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நாட்டின் அடுத்த தலைமுறையினர் பிரிவினைவாதத்துக்குள் தள்ளப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.