அத்தியாவசியப் பொருட்கள் 10 இன் விலைகள் குறைப்பு – இன்று முதல் நடைமுறை
நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலையை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பானது இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ கிராம் சிவப்பு நாட்டு அரிசி 08 ரூபாவினால், வெள்ளை நாட்டு அரிசி 07 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதுடன் கொண்டைக் கடலையின் விலை 05 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் வெள்ளை சீனி ஒரு கிலோகிராமின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 275 ரூபாவாகும்.
இறக்குமதி செய்யப்படும் டின் மீன் 425 கிராமின் விலை 55 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 595 ரூபாவாகும்.
உள்ளூர் டின் மீனின் 425 கிராமின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 530 ரூபாவாகும்.
இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன் 155 கிராமின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய 280 ரூபாவாகும். கடலை பருப்பு ஒரு கிலோ கிராமின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 225 ரூபாவாகும்.
உள்ளூர் மற்றும் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 300 ரூபாவாகும். கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 195 ரூபாவாகும்.
லங்கா சதொச பால் மா 400 கிராமின் விலை 08 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 940 ரூபாவாகும். கடலை ஒரு கிலோ கிராமின் விலை 05 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 535 ரூபாவாகும்.
அத்துடன், வெள்ளை நாடு அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 05 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 207 ரூபாவாகும்.
சிகப்பு நாடு அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 218 ரூபாவாகும்.