News

9 வருடங்களின் பின் மீண்டும் திறக்கப்படவுள்ள அரிசிக் களஞ்சியசாலை

இலங்கையில் ஒன்பது வருடங்களாக கைவிடப்பட்டிருந்த அரிசி மொத்த விற்பனை மத்திய நிலையம் நாளை (19) திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர அரிசி வியாபாரிகளுக்காக மரந்தகஹமுலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த அரிசிக் களஞ்சியசாலை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இயங்கிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இந்த நிலையம் 2015 இல் இல்லாமல் ஆக்கப்பட்டதுடன், கடந்த ஒன்பது ஆண்டுகளாக, இந்த களஞ்சிய வளாகம் மற்றும் மொத்த வர்த்தக மையம் காடு போல் வளர்ந்து காணப்பட்டது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களின் தலையீட்டின் பேரில், இந்தக் களஞ்சிய வளாகம் மீண்டும் புனரமைக்கப்பட்டது. இதன் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க திறைசேரியில் இருந்து பணம் கேட்டு பிரசன்ன ரணதுங்க இந்த ஆண்டு அமைச்சரவை பத்திரத்தையும் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுமார் இரண்டு ஏக்கர் அளவில் அமைந்ததும் 115 அரிசி விற்பனை நிலையங்களைக் கொண்ட இதனை நிர்மாணிப்பதற்கு 459 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

குறித்த  களஞ்சிய வளாகத்தில் சுமார் 75 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல்லை சேமித்து வைக்கும் வசதிகள் காணப்படுவதுடன்,  நெல் வாரியத்தின் கீழ் உள்ள இரண்டு களஞ்சியசாலைகளினாலும் இதுவரை எவ்வித பயனும் இல்லை என வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மரந்தகஹமுல விசேட மொத்த விற்பனை நிலையம் நாளை (19) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதுடன் தினமும் காலை 5.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை திறந்திருக்கும்.

அத்துடன் மொத்த வியாபாரிகள் அரிசி உட்பட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் இங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மத்திய நிலையத்தில் அவர்களுக்கு தேவையான வாகனம் நிறுத்தும் வசதிகள் மற்றும் பொதுவான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button