ஐபிஎல் ஏலம் ஆரம்பம்! வரலாற்றில் இடம்பிடித்த பெட் கம்மின்ஸ்!
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரராக அவுஸ்திரேலியா அணியின் தலைவர் பெட் கம்மின்ஸ் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20.5 கோடி இந்திய ரூபாய்களுக்கு வாங்கியுள்ளது.
துபையில் 2024-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், டில்லி கெபிடல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 10 அணிகளும் இந்த மினி ஏலத்தில் பங்கேற்றுள்ளனர்.
மொத்தம் 77 இடங்களுக்கு 333 வீரர்கள் ஏலத்தில் தங்களின் பெயர்களை கொடுத்துள்ளனர். அதில், 214 இந்திய வீரர்கள், 119 வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.
அதன்படி, சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹரசங்கவை இந்திய ரூபாயில் சுமார் 1.50 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது.
இங்கிலாந்து வீரர் ஹாரி புருக்கை டெல்லி கெப்பிடல்ஸ் அணி 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
மேற்கிந்திய வீரர் ரோவ்மேன் பவலை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் ரோவ்மேன் பவலை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது. இறுதியில் ராஜஸ்தான் பவலை தட்டி தூக்கியது.
ரூ. 10 கோடிக்கும் அதிகமான தொகைக்கு அவுஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் வாங்கப்படலாம் என்று பேசப்பட்ட நிலையில் அவரை ரூ. 6.80 கோடிக்கு வாங்கி டீலில் அசத்தியுள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹேரி ப்ரூக்கை ரூ. 4 கோடிக்கு டெல்லி கெபிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை தட்டி தூக்கியது சிஎஸ்கே. உலகக்கிண்ணத் தொடரில் அதிரடியாக ஆடி கவனம் ஈர்த்த ரச்சின் ரவீந்திராவை சிஎஸ்கே அணி ரூ.1.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
ரூ. 2 கோடி அடிப்படை விலையாக கொண்ட ஷர்துல் தாகூரை அணியில் எடுக்க சன்ரைசர்ஸ் மற்றும் சென்னை அணிகள் கடும் போட்டியிட்டன. இறுதியில் சென்னை அணி ரூ. 4 கோடிக்கு சென்னை அணி ஷர்துல் தாகூரை வாங்கியது.
ரூ. 50 இலட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட ஆப்கன் அணியின் அஸ்மதுல்லா உமர்சாயை அதே விலைக்கு குஜராத் அணி வாங்கியது. இவரை வாங்க மற்ற அணிகள் ஆர்வம் காட்டவில்லை.
டேரில் மிட்செலை வாங்க இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இறுதியில் ரூ. 14 கோடிக்கு சென்னை அணி மிட்செலை ஏலத்தில் எடுத்தது.
ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக ரூ. 20 கோடிக்கு அதிகமாக வாங்கப்பட்ட முதல் வீரர் என்ற பெயரை பெற்றுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் பெட் கம்மின்ஸ்.
பெட் கம்மின்ஸ் ரூ. 20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டதை சென்னை அணி மீம்ஸாக வெளியிட்டுள்ளது. இதற்கு லைக்ஸ்கள் குவிகின்றன.