News

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் ரணில் வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் ரணில் வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி | Electricity And Fuel As Essential Service Gazatte

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் (2363/02) ஒன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (18) வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தலில் இரண்டு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மின்சாரம் வழங்கல், பெட்ரோலியப் பொருட்கள் விநியோகம் மற்றும் எரிபொருள் ஆகியவையே அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், வர்த்தமானி அறிவித்தலின் படி, மின்சார விநியோகம், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எரிபொருளின் விநியோகம் அல்லது விநியோகம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக கருதப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button