News
நாடாளுமன்ற தேர்தலை ஒத்தி வைக்க முயற்சி
அடுத்த வருடம் அதிபர் தேர்தலை நடத்தி பொதுத் தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவை அடுத்த அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தவுள்ளதாகவும், அதற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் ஆகியோரிடம் அமைப்புப் பணிகள் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், அதிபர் தேர்தலுக்கு முன்னர் நிறுவன செயற்பாடுகள் திட்டமிட்டு முடிக்கப்படும் எனவும் அதிபர் தேர்தலின் பின்னர் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படும் எனவும் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.