News

முச்சக்கரவண்டி கட்டணங்கள் தொடர்பில் அரசின் அதிரடி நடவடிக்கை

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் முறையை கட்டாயமாக்குவது குறித்து அரசு கவனம் செலுத்தி வருகிறது.

மீட்டர் இல்லாத முச்சக்கர வண்டி சாரதிகள் நியாயமற்ற கட்டணங்களை அறவிடுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சில முச்சக்கர வண்டிகள் ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்திற்கு 300 ரூபாவை வசூலித்த சம்பவங்கள் குறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அதன்படி, பயணிகள் போக்குவரத்திற்காக பதிவுசெய்யப்பட்ட அனைத்து முச்சக்கர வண்டிகளையும் எதிர்காலத்தில் மீட்டர் முறைக்கு மாற்றியமைக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் மூலம் நாடு முழுவதும் ஒரு கிலோ மீட்டருக்கு இணையான கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

மேலும், ஒரு லீற்றர் பெட்ரோல் 365 ரூபாவாக இருக்கும் நிலையில் முச்சக்கரவண்டிக்கு கிலோமீட்டருக்கு 300 ரூபா அறவிடப்படுவது நியாயமற்றது என போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button