ஜனவரியில் இணைய பாதுகாப்பு சட்டமூலம் : வெளியான தகவல்
திருத்தப்பட்ட இணைய பாதுகாப்பு சட்டமூலம் (OSB)அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு பொது பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து செயற்படுமாறு தனது நாடாளுமன்ற விவகார ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்கவுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் 07, 2023 அன்று அறிவிக்கப்பட்ட உயர் நீதிமன்றத்தின் தீர்மானங்களின்படி திருத்தப்பட்ட சட்டமூலம் இருக்கும் என்று பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
அண்மைக்காலமாக, சமூக ஊடகங்கள் வாயிலாக வெறுப்புனர்வை பரப்பும் வகையிலான இன,மத ரீதியாக அமைந்த பதிவுகள் அதிகரித்து வரும் போக்கினை அவதானிக்க முடியும்.
இதனை கருத்திற் கொண்டு, மேற்சொன்ன முரண்பாடுகளை தவிர்த்து கொள்வதற்காக இச்சட்டமூலம் அறிமுகம் செய்யப்பட்டது. இருந்தபோதிலும் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் இச்சட்டமூலத்திற்கான விமர்சனங்கள் எழுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.