இலங்கையில் மின்சார அலகொன்றை குறைந்த விலையில் வழங்கவுள்ள கௌதம் அதானி
இந்திய தொழிலதிபர் கௌதம் அதானியின் காற்றாலை ஆற்றல் திட்டம் மூலம் இலங்கையில் குறைந்த விலையில் மின்சார அலகினை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி பாவனையாளர்களுக்கு 30 வீத செலவுக் குறைப்பை வழங்க முடியும் என்பதுடன் அலகு ஒன்றுக்கான செலவுகளை 0.10 டொலர்களுக்கு கீழ் குறைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பொதுமக்களுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை அளிக்கும் எனவும் அதானி குழுமத் தகவல்கள் கூறியுள்ளன.
காற்றாலை மின்சார திட்டத்தினால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு வருடாந்தம் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் உயரதிகாரிகளின் எதிர்ப்பு காரணமாகவே இந்த திட்டங்கள் தாமதமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் மொத்தம் 25 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்வதற்கான நோக்கங்களை நிறுவனங்கள் வெளிப்படுத்தியுள்ள நிலையில் சன் பவர் என்ற நிறுவனம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டுடன் முன்னணியில் உள்ளது.
அதானி கிரீன் 900 மில்லியன் டொலர்களையும் ஆர்பிட்டல் எனர்ஜி 200 மில்லியன் டொலர்களையும், wind Force PLC 150 மில்லியன் டொலர்களையும் முதலிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.