ஜனவரி முதல் பெட்ரோலுக்கு வரி அறவீடு செய்ய தீர்மானம்!
பெட்ரோலுக்கான பெறுமதி சேர் வரி 10.5 வீதத்தினால் அதிகரிக்கும் என ஜனாதிபதி செயலகத்தின் அரச வருமானப் பிரிவின் பணிப்பாளர் கே.கே.ஐ. எரந்த தெரிவித்துள்ளார்.
பெட்ரோலுக்கு இதுவரையில் அறவீடு செய்யப்பட்டு வந்த 7.5 வீத துறைமுக மற்றும் விமான நிலைய வரி ஜனவரி மாதம் முதல் நீக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து தொழிற்சங்கங்களை தெளிவுபடுத்தும் நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரி 18 வீதம் அறவீடு செய்யப்பட உள்ளதுடன், பெட்ரோலுக்கு 10.5 வீத வரி அறவீடு செய்யப்படும் எனவும் எரந்த குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பெட்ரோல் டீசலுக்கான பெறுமதி சேர் வரி குறித்து ஆராய்ந்து வருவதாக மின்வலு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசசேகர அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.