News

டொலர்களை அள்ளி குவிக்கும் தாமரைக் கோபுரம்!

அதிகளவான சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும் தலங்களில் ஒன்றாக கொழும்பிலுள்ள தாமரைக் கோபுரம் நிகழ்ந்துள்ளதாக கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் நிறுவனம் (பிரைவேட்) லிமிடெட் தெரிவித்துள்ளது.

அதன் படி நேற்றைய தினம் வரை தாமரை கோபுரத்திற்கு 7,522 பார்வையாளர்கள் வருகை தந்ததாகவும் கூறப்படுகிறது.

அதில் 7,285 உள்ளூர் பார்வையாளர்களும் 237 வெளிநாட்டு பார்வையாளர்களும் அடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் தாமரைக் கோபுரத்தை பார்வையிட வருகை தந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை தாமரை கோபுர நிர்வாகத்தினரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

ஏனென்றால் அன்றிலிருந்து, மொத்தமாக 1,400,444 உள்ளூர் பார்வையாளர்கள் மற்றும் 42,297 வெளிநாட்டினர் கோபுரத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

தெற்காசியாவிலே மிக உயரமான கோபுரமாக விளங்கும் இந்த தாமரைக்கோபுரமானது,இலங்கைக்கான ஒரு அடையாளமாக மாத்திரமல்லாமல் பிரபல்யமான சுற்றுலாத்தலமாகவும் விளங்குகின்றது.

இதனை மேலும் சிறப்பாக்கும் வகையில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை மக்கள் பயன்பாட்டுக்கு அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தவுள்ளதாக கோபுரத்தின் நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அண்மையில் இந்தக் கோபுரத்தில் சுழலும் உணவகம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button