News
நிதி நிறுவனங்களை ஒழுங்கு படுத்த புதிய அதிகார சபை!
நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையை மத்திய வங்கி சரியான முறையில் மேற்கொள்ளாததால், எதிர்காலத்தில் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள புதிய அதிகார சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் மத்திய வங்கியால் பொருளாதாரத்தை உரிய முறையில் கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே தற்போதைய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
வரி விதிப்பினால் குறுகிய கால துன்பங்களை அனுபவித்தாலும் நீண்டகால நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.