இலங்கையின் கிழக்குப் பகுதியை அண்மிக்கவிருக்கும் காற்று சுழற்சி
இலங்கையின் தென்கிழக்காக உருவாகி இருக்கின்ற காற்று சுழற்சியானது இலங்கையின் கிழக்குப் பகுதியை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது இலங்கையை எதிர்வரும் 03ஆம் திகதியளவில் நெருங்கி 04, 05 மற்றும் 06ஆம் திகதிகளில் இலங்கையின் கிழக்குப் பகுதியை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் மாலைதீவிற்கு அருகே காணப்படுகின்ற காற்று சுழற்சியானது மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
மேலும், இலங்கையின் தென்கிழக்காக உருவாகி இருக்கின்ற காற்று சுழற்சியானது அதன் பின்னர் எதிர்வரும் 07 – 10ஆம் திகதிகளில் தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களை அல்லது இலங்கையின் வடபகுதியை நெருங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காலை 08.30 மணியுடன் முடிவடைந்த இன்றைய கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கிடைக்கப்பெற்ற மழை வீழ்ச்சி அளவுகள் பின்வருமாறு,
கடந்த 24 மணித்தியாலத்தில் இலங்கையில் அதி கூடிய மழைவீழ்ச்சியாக றூபஸ்குளம் (அம்பாறை மாவட்டம்) 170.0mm மழை வீழ்ச்சியும் அதி கூடிய வெப்பநிலையாக 32.4 செல்சியஸ் மத்தளலும் அதி குறைந்த வெப்பநிலையாக 15.0 செல்சியஸ் நுவரெலியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம்:
பொத்துவில் 49.9mm
அம்பாறை 77.4mm, இக்கினியாகலை 75.5mm
எக்கல் ஓய 40.0mm
பன்னலகம 66.7mm
மகா ஓய 67.8mm
பாணமை 84.7mm
லகுகல 48.5mm
திகவாவி 48.0mm
அக்கரைப்பற்று 32.4mm
இலுக்குச்சேனை 28.4mm
சாகமம் 36.8mm
றூபஸ்குளம் 179.0mm
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை 19.2mm.
மட்டக்களப்பு மாவட்டம்:
மட்டக்களப்பு நகர் 62.6mm
உன்னிச்சை 68.0mm
உறுகாமம் 97.5mm
வாகனேரி 119.3mm
கட்டுமுறிவுக் குளம் 32.0mm
கிரான் 49.0mm
நவகிரி 98.0mm
தும்பன்கேணி 60.0mm
திருகோணமலை மாவட்டம்:
திருகோணமலை 4.2mm
கடற்படைத்தளம் 4.7mm
குச்சவெளி 2.1mm
கந்தளாய் 28.3mm
யாழ் மாவட்டம்:
யாழ்ப்பாணம் 3.7mm
அச்சுவேலி 15.4mm
நயினாதீவு நீர் வழங்கல் நிலையம் 9.1mm
நீர்ப்பாசன திணைக்களம் 0.9mm
நெடுந்தீவு 2.9mm
ஆணையிறவு 3.6mm
சாவகச்சேரி 0.4mm
கிளி நொச்சி மாவட்டம்:
கிளிநொச்சி 3.8mm
இரணைமடுக்குளம் 4.7mm
முல்லைத்தீவு மாவட்டம்:
முல்லைத்தீவு 0.5mm
அத்துடன், இலங்கையின் ஏனைய பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலத்தில் பதிவு செய்யப்பட்ட மழை வீழ்ச்சிகளின் அளவுகள் இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.