News

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சைபர் பாதுகாப்பு நிறுவனமான மெக்கஃபீ (McAfee) 25 மோசடி செயலிகளை ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் இருந்து கண்டறிந்துள்ளது.

பல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் இந்த செயலிகள் நிறுவப்பட்டுள்ளதாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இந்த பட்டியலில் உள்ள சில செயலிகள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை மெக்கஃபீ வெளியிட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மொத்தமாக 3 லட்சத்து 38 ஆயிரத்து 300 ஸ்மார்ட்போன்களில் இந்த செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

இது போன்று இரட்டை வேடமிட்டு கூகுள் ப்ளே ஸ்டோரில் உலாவிய செயலிகளை ’ஸாமால்சியஸ்’ என்று அழைக்கின்றனர்.

பெரும்பாலும் அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பிரேசில், மெக்சிகோ, அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் உள்ள தகவல் சாதனங்களில் இந்த செயலிகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

2020ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து பயனர்கள் இந்த செயலிகளை நிறுவியுள்ளனர்.” என குறிப்பிட்டுள்ளது.

செயலிகளின் பட்டியல்

உங்கள் ஸ்மார்ட் போன்களில் பின்வரும் செயலிகள் இருந்தால், அதனை நீக்கிவிடும்படி நிறுவனம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

  1. எசன்சியல் ஹாரோஸ்கோப் ஃபார் ஆண்ட்ராய்டு (Essential Horoscope for Android) – ஒரு லட்சம் டவுன்லோடு
  2. 3டி ஸ்கின் எடிட்டர் ஃபார் பிஇ மைன்கிராஃப்ட் (3D Skin Editor for PE Minecraft) – ஒரு லட்சம் டவுன்லோடு
  3. லோகோ மேக்கர் ப்ரோ (Logo Maker Pro) – ஒரு லட்சம் டவுன்லோடு
  4. ஆட்டோ கிளிக் ரிப்பீட்டர் (Auto Click Repeater) – பத்தாயிரம் டவுன்லோடு
  5. கவுண்ட் ஈசி கலோரி கால்குலேட்டர் (Count Easy Calorie Calculator) – பத்தாயிரம் டவுன்லோடு விளம்பரம்
  6. சவுண்ட் வால்யூம் எக்ஸ்டெண்டர் (Sound Volume Extender) – ஐந்தாயிரம் டவுன்லோடு
  7. லெட்டர் லிங்க் (LetterLink) – 1000 டவுன்லோடு
  8.  நியூமராலஜி: பெர்சனல் ஹாரோஸ்கோப் & நம்பர் பிரெடிக்‌ஷன் (NUMEROLOGY: PERSONAL HOROSCOPE &NUMBER PREDICTIONS) – 1000 டவுன்லோடு
  9. ஸ்டெப் கீப்பர்: ஈசி பெடோமீட்டர் (Step Keeper: Easy Pedometer) – 500 டவுன்லோடு விளம்பரம்
  10.  டிராக் யுவர் ஸ்லீப் (Track Your Sleep) – 500 டவுன்லோடு
  11. சவுண்ட் வால்யூம் பூஸ்டர் (Sound Volume Booster) – 100 டவுன்லோடு
  12. அஸ்ட்ராலஜிக்கல் நேவிகேட்டர்: டெய்லி ஹாரோஸ்கோப் & டேரட் (Astrological Navigator: Daily Horoscope & Tarot) – 100 டவுன்லோடு
  13. யுனிவெர்சல் கால்குலேட்டர் (Universal Calculator) – 100 டவுன்லோடு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button