News

அதிக அதிகாரங்கள் வழங்கப்படவுள்ள ஆணைக்குழு

இலங்கையில் சட்டமாக்கப்படவுள்ள, உண்மை ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான உத்தேச ஆணைக்குழுவுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி ஆணைக்குழுவின் முன்னால் எந்தவொரு பொதுமகனும் வழங்கிய சாட்சியங்கள் அவருக்கு எதிராக, எந்தவொரு சிவில் அல்லது குற்றவியல் நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியால் சமர்பிக்கப்பட்டுள்ள இந்த யோசனையில், மோதல் காரணமாக உயிர் சேதம், சொத்துக்களுக்கு சேதம் மற்றும் மனித உரிமை மீறல் போன்ற சம்பவங்கள் குறித்து விசாரணை, மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்கான பரந்த அளவிலான அதிகாரங்களை ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ளது.

1983 முதல் 2009 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அல்லது அதன் பின்விளைவுகளை இந்த ஆணைக்குழு விசாரிக்கவுள்ளது. ஆணைக்குழு தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தின் முடிவில் இடைக்கால அறிக்கைகளுடன், பரிந்துரைகளுடன் அதன் செயல்பாடுகளை விபரிக்கும் அதன் இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் அமைப்பு குறைந்தபட்சம் 7 உறுப்பினர்களில் இருந்து 21 வரை இருக்கும் போது, அதன் பதவிக்காலம் 5 ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது ஜனாதிபதி ஆணை மூலம் அதன் காலம் 1 வருடம் வரை நீடிக்கப்படலாம்.

ஆணைக்குழு எந்தவொரு தனிநபரையும் சாட்சியமளிக்க அல்லது ஆதாரங்களை முன்வைக்க அழைக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.

அவ்வாறு செய்யத் தவறினால் அது மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு எதிராக செய்யப்பட்ட தண்டனைக்குரிய குற்றத்திற்கு சமமாக கருதப்படும் என்றும் யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button