ரின் மீன் இறக்குமதிக்கு தடை?
ரின் மீன்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டதாகவும் இலங்கை சந்தைக்கு தேவையான ரின் மீன்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமென்ற போதும் கடந்த காலங்களில் பெருமளவு ரின் மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருப்பதாகவும் இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
இறக்குமதி செய்யப்பட்ட ரின் மீன்களின் விலை குறைவடைந்துள்ளதாகவும் தற்போது அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள செஸ் மற்றும் வற் வரி காரணமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள ரின் மீன்களின் விலைக்கு தங்களது உற்பத்திகளை வழங்க முடியாதென்பதால் தங்களது தொழிற்சாலைகளை மூடி விடவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் பிரநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.
இப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக அமைச்சர், இன்று முதல் ரின் மீன் இறக்குமதிக்காக முன்னர் வழங்கப்பட்ட அனுமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியதுடன் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள ரின் மீன்களுக்கு மேலதிக வரி ஒன்றை அறவிடுவதற்கு ஏதுவான சாத்தியக் கூறுகள் தொடர்பாக ஆராய்ந்து தமக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளர் குமாரி சோமரத்னவுக்கு ஆலோசனை வழங்கினார்.
அத்துடன் இலங்கையில் மீன்களின் விலைகள் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் மீன்களை இறக்குமதி செய்யும் போது தேசிய ரின் மீன் உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்பாளர் நாயகத்திற்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியதுடன் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சந்தை விலை மற்றும் விநியோகம் தொடர்பாக அவதானத்துடன் இருக்குமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.