News
மக்களுக்கு வழங்கப்படவுள்ள மின் கட்டண நிவாரணம்: மின்சார சபை விளக்கம்
மக்களுக்கு மின் கட்டண நிவாரணம் வழங்குவதற்கான பிரேரணையை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இன்று (12.01.2024) செய்யப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
“நவம்பர் டிசம்பரில் நல்ல மழை பெய்தது. அதனால் மின்சாரக் கட்டணத்தின் மூலம் மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். 0-30, 0-60 மற்றும் 0-90 யூனிட்களுக்கு இடைப்பட்ட மக்களைப் பற்றி பேசுகிறார்கள்.
அவர்களின் வாழ்க்கை நிலைமை மிகவும் கீழ் மட்டத்தில் உள்ளது.
கண்டிப்பாக அந்த வரம்பில் உள்ளவர்களுக்கு குறித்த நிவாரணத்தை வழங்க கடமையாற்றுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.