News

அறிமுகமாகவுள்ள புதிய நாணய முறை : மத்திய வங்கி அறிவிப்பு!

இந்த வருட (2024) இறுதிக்குள் இலங்கைக்கான டிஜிட்டல் நாணயத்தை மத்திய வங்கி அறிமுகப்படுத்த உள்ளதாக அதன் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (12) நாடாளுமன்றத்தில் உயர்மட்ட குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

‘லங்கா பே (Lanka Pay)’ மற்றும் ‘மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் (Central Bank Digital Currencies)’ ஆகிய அமைப்புகள் டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளன.

அதன்படி, இந்த இரண்டு அமைப்புகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்தும்.”என்றார்.

இலங்கையில் நிகழ்நிலைக் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மத்திய வங்கி அதிகாரிகள் குழு அழைக்கப்பட்டனர்,

இதன்போது மற்றும் நிகழ்நிலை கட்டண முறைகளை ஒழுங்குபடுத்துவது குறித்து, வழிகள் மற்றும் வழிமுறைகள் பற்றிய குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க,கேட்டறிந்து கொண்டதாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கையில் நிதிப் பதிவேடு இல்லாததால் 45 சதவீத நிதி பரிவர்த்தனைகள் முறைப்படுத்தப்படாமல் நடப்பதாகவும் தெரியவந்துள்ளது.

எரிபொருள் விற்பனையில் பயன்படுத்தப்படும் QR குறியீட்டு முறையை நிதி சேவைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரணவக்க இதன்போது முன்மொழிந்தார்.

மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், கலால் திணைக்களம் மற்றும் சுங்கம் ஆகியன இணையத்தளத்தில் பணம் செலுத்தும் முறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார்.

இந்த நோக்கத்திற்காக பிளாக்செயின் அமைப்புகளைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

தவிரவும், இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்நிலைக் கட்டண முறைகள் குறித்து ஆய்வு செய்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய வங்கி அதிகாரிகளை வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு இதன்போது கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button