News

அரசாங்கத்திடம் மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ள கோரிக்கை!

விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். முறையான கணக்கெடுப்புகளை நடத்தி நிவாரணங்களை வழங்கி அவர்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

நாங்கள் தேசிய அரிசியிலான உணவையே சிறுவயது முதல் உண்கின்றோம். ஆனால் இப்போது இறக்குமதி செய்யப்படும் அரிசியை அதிகளவில் வாங்குகின்றனர். ஆனால் தேசிய அரிசியில் சுவை மாத்திரமன்றி சத்துக்களும் அதிகமாகும். இதனால் தேசிய அரிசியை ஊக்குவிப்பது அவசியமாகும்.

தேசிய விவசாயிகள் தொடர்பில் கூறும் போது காலநிலை மாற்றங்களால் பொலனறுவை, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது பெருமளவிலான வயல் நிலங்கள் சேதமடைந்துள்ளன.

இந்த பகுதியிலுள்ள விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். முறையான கணக்கெடுப்புகளை நடத்தி நிவாரணங்களை வழங்கி அவர்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை கோருகின்றேன்.

பல்வேறு காரணிகளினால் நாட்டின் தேசிய விவசாயத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. நடைமுறைக்கு சாத்தியமான வகையில் விவசாய கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும்.பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை மேம்படுத்தாமல் பொருளாதார ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button