ஐஎம்எம் இன் புதிய நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய இலங்கை
சர்வதேச நாணய நிதியத்தின் சில முக்கிய நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை எனவும், முன்வைக்கப்பட்டுள்ள சில முக்கிய நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் இன்னமும் பூர்த்தி செய்யவில்லை என வெரிடே ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடன் வசதி வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியம் 73 புதிய நிபந்தனைகளை விதித்திருந்ததாகவும், இதில் 60 நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த சில முக்கிய நிபந்தனைகளை அரசாங்கம் இன்னமும் பூர்த்தி செய்யவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இணங்கியிருந்தது.
இந்நிலையில், பூர்த்தி செய்யத் தவறிய ஐந்து நிபந்தனைகளை இனி நிறைவேற்ற முடியாது எனவும், ஏனைய எட்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாது என்றும், இரண்டாம் தவணைக் கடனை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இரண்டாம் தவணைக் கடனைப் பெற்றுக்கொள்வதற்காக மேலும் 110 நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டி வரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.