கடும் சிரமங்களை எதிர்நோக்கும் பொதுமக்கள்!
நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் போன்றவற்றை அச்சிடுவதற்கான மூலப்பொருட்கள் இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டதுடன், தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிட முடியாத ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன என ஆட்கள் பதிவு திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம்.அதிகாரிகள் வெளிப்படுத்துகின்றன.
இந்த நிலையில் எதிர்வரும் பொதுத் தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள சிறுவர்கள், வெளிநாடு செல்ல விரும்புபவர்கள், ஓய்வூதியக் கொடுப்பனவுகள் போன்ற அத்தியாவசிய சேவைகளைப் பெறுவதற்கு தேசிய அடையாள அட்டையைப் பெற வேண்டி ஆட்பதிவு திணைக்களத்தின் முன்பாக கடும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வருபவர்கள் அதிகாலை 5.30 மணி முதல் வரிசையில் நின்று தேசிய அடையாள அட்டைகளைப் பெற முயற்சிப்பதையும், அவர்களின் உதவியாளர்கள் தெரு முனைகளில் உள்ள கழிவறைகளுக்கு அருகில் பிச்சைக்காரர்கள் போல் அமர்ந்திருப்பதையும் நாம் தொடர்ந்து பார்க்கிறோம்.
தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதை அத்தியாவசிய சேவையாக மாற்றி, தேவையான மனித மற்றும் பௌதீக வளங்களை உடனடியாக வழங்க வேண்டும் என இங்கு வரும் மக்கள் அரசாங்கத்திடமும் பொறுப்புக்கூறும் அதிகாரத்திடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.