அத்தியாவசியப் பொருட்கள் 06 இன் விலைகள் குறைப்பு: இன்று முதல் நடைமுறை
நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, 6 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக இன்று (05) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்பட்ட உளுந்து, இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் மொத்த விலை பட்டியல் பின்வருமாறு அமைந்துள்ளது.
காய்ந்த மிளகாய் – ஒரு கிலோ 870 ரூபா
வெள்ளை சீனி – ஒரு கிலோ 265 ரூபா
இறக்குமதி செய்யப்படும் உளுந்து – ஒரு கிலோ 900 ரூபா
பெரிய வெங்காயம் – ஒரு கிலோ 320 ரூபா
உருளைக்கிழங்கு – ஒரு கிலோ 120 ரூபா
பருப்பு – ஒரு கிலோ 295 ரூபா