விவசாயிகளுக்காக அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
விவசாய அமைச்சு முன்னர் நிர்ணயிக்கப்பட்ட ஐந்து ஏக்கர் பரப்பளவை, இரண்டு ஏக்கர் விளைநிலங்களாகக் குறைத்துடன்,விவசாயிகளுக்கு தங்கள் பயிர்களைப் பாதுகாப்பதற்காக துப்பாக்கிகளை வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
காட்டுப்பன்றிகள், குரங்குகள் மற்றும் இராட்சத அணில்கள் தங்கள் பயிர்களை அழித்ததால் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் பயிர்களை கைவிட்டதாகவும், அதனால் ஏற்பட்ட சேதம் ஐம்பது சதவீதத்தை தாண்டியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள விவசாய அமைச்சு, “வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க தற்போது மாற்று வழி இல்லை என்பதால், விவசாயிகளின் கோரிக்கையை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும்.
2023 ஆம் ஆண்டில், வன விலங்குகள் நாட்டில் 300 மில்லியன் தென்னந்தோப்புகளை அழித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில், குரங்குகள் மற்றும் இராட்சத அணில்களால் 96 மில்லியன் தேங்காய்கள் அழிக்கப்பட்டன.
இந்த வன விலங்குகள் மொத்த பயிர்களில் 40 சதவீதத்தை நாசம் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க முடிந்தால், புதிய பயிர்களை பயிரிடாமல் உணவில் தன்னிறைவு அடைய முடியும்.”என அமைச்சு தெரிவித்துள்ளது.
100,000 குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான விவசாய அமைச்சின் முன்மொழிவை எதிர்த்து வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS), பல அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் (மொத்தம் 30 மனுதாரர்கள்) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.