News
அரச ஓய்வூதியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
7 லட்சத்துக்கும் மேற்பட்ட அரச ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக ஓய்வூதியர்கள் தெரிவித்துள்ளனர்.
சில அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்று ஓராண்டுக்கு மேலாகியும், ஓய்வூதியத் துறை அதைத் தயாரிப்பதில் காலதாமதம் செய்து வருவதாகவும், 2016க்குப் பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட சிறப்பு கொடுப்பனவும் இதுவரை கிடைக்கவில்லை தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, இந்த வருடத்திற்கான பெப்ரவரி மாத ஓய்வூதிய கொடுப்பனவு இன்று வழங்கப்பட்ட போதிலும், இதுவரையில் விசேட கொடுப்பனவு உள்ளடக்கப்படவில்லை எனவும் ஓய்வூதியதாரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதேவேளை, ஓய்வூதியர்களின் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஆணையாளர் நாயகத்திற்கு தொடர்பு ஏற்படுத்த முயற்சி செய்த போதிலும் முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.