News

கொழும்பில் விற்பனையான தீங்கு விளைவிக்கும் அழுகுசாதனப் பொருட்கள்

கொழும்பில் மனித உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயன கலவைகள் அடங்கிய  ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய அழகுசாதனப் பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை அவ்வாறான அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்த 04 கடைகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது அந்த கடைகளின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டதுடன், மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் 1143 வகையான அழகுசாதனப் பொருட்களும் விசாரணை அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டன.

குறித்த சுற்றிவளைப்பு நேற்று (21) புறக்கோட்டை இரண்டாவது குறுக்குத் தெருவில் வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு விற்பனை செய்யப்படும் அழகுசாதனப் பொருட்கள் தரமற்றவை எனவும், அவற்றை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதிகளை கூட பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன் இந்தச் சோதனையின் மூலம் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தடைசெய்யப்பட்ட அழகு சாதனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22, 25, 45, 52 வயதுடைய கலகெடிஹேன, மொரட்டுவை மற்றும் வத்தளை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button