News

புலம்பெயர் இலங்கையர்கள் தொடர்பில் அரசு எடுத்த தீர்மானம்!

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ​வெளிநாட்டு வாழ் இலங்கையருக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட இராஜதந்திரி வீ.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடக பிரிவின் ஏற்பாட்டில் நடத்தப்படும் பேசாப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் கிருஷ்ணமூர்த்தி தெரிவிக்கையில், “புலம்பெயர்வு என்பது புதிய விடயமல்ல மனித வாழ்க்கை முறை ஆரம்பித்த காலத்திலிருந்து பல்வேறுபட்ட காரணங்களுக்காக இடம்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளதோடு மனிதன் தனக்கு சாத்தியமான வளங்கள் காணப்படும் பகுதிகளை நோக்கி நகர்வதை காண முடிகிறது.

இன்றளவில் நியூசிலாந்து மற்றும் வட அமெரிக்கா வரையில் உலகின் பல பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்க இடைக்கால வரவு செலவு திட்டத்தில் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கான நிதியம், அலுவலகம் மற்றும் அலுவலகச் சட்டமூலம் உள்ளிட்ட மூன்று விடயங்கள் குறித்து சுட்டிக்காட்டியிருந்தார்.

அதற்கமைய வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கான அலுவலகம் கடந்த வருடத்தின் இறுதியில் கொழும்பு பழைய சார்டட் கட்டிடத்தில் அமைச்சரவை அனுமதியுடன் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையர்கள் இதுவரையில் ஐந்து அலையாக வௌிநாடுகளுக்குச் சென்றுள்ளதுடன் 2.5 – 3 மில்லியன் வரையில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்திருப்பதாக அண்ணளவாக கணக்கிட்டுள்ளதோடு அவர்களில் 1.6 மில்லியன் பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக உள்ளனர்.

தொழிலாளர்கள் பதிவு செய்துவிட்டு செல்வதால் அவர்களுடைய தகவல்கள் எம்மிடத்தில் உள்ளன ஆனால் ஏனைய காரணங்களுக்காக புலம்பெயர்ந்தவர்கள் பற்றிய தகவல்கள் சரியான வகையில் இல்லை இருப்பினும் விரைவில் மற்றைய தூதரங்களைத் தொடர்பு கொண்டு இவர்கள் பற்றிய தகவல்களை நாம் சேகரிக்க முயற்சிக்கிறோம்.

அதற்காக அவர்களின் சுய விருப்பத்தின் பேரில் சில அடிப்படை தகவல்களை மாத்திரம் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

இந்த தவகல்களின் இரசிய தன்மை முழுமையாக பாதுகாக்கப்படும் என்பதோடு இந்த அலுவலகம் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களையும் தாயகத்தையும் ஒன்றிணைக்கும் மையப்புள்ளியாக செயற்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன் மத்திய வங்கியும் அதன் நாணயச் சபையும் அழைக்கப்படும் எனவும் வலேபொட தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மத்திய வங்கி ஊழியர்களின் 70 சதவீத சம்பள அதிகரிப்பு குறித்து, தமது குழு கடும் விமர்சனங்களை கொண்டுள்ளதுடன் இது ஒழுக்கக்கேடான செயல் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button