News

49 சதவீதமான அரச அதிகாரிகள் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!

அரச அதிகாரிகளின் 49 சதவீதமானவர்களில் தொலைபேசி இலக்கங்கள் செயற்படாத இலக்கங்களாக உள்ளமை  கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரதேச செயலகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களைக் கருத்தில் கொண்டு இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த இலக்கங்கள் பயன்பாட்டில் உள்ளதா? அழைக்கும் போது பதிலளிக்க படுகிறதா? என ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கணக்கெடுக்கப்பட்ட 589 தொலைபேசி இலக்கங்களில் 286, அதாவது 49% சதவீதமான இலக்கங்கள் செயற்படாத இலக்கங்கள் என்று தெரியவந்துள்ளது.

22% தொலைப்பேசி இலக்கங்கள் செயற்பாட்டில் இருக்கும் போதும் பதிலக்கப்படவில்லை.

அழைப்புகளுக்கு பதிலளிக்கும் சதவீதம் 29% என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

மேலும், 98 உள்ளூராட்சி மன்றங்கள், 23 மாநகர சபைகள் மற்றும் 36 நகர சபைகளின் நிலையான தொலைப்பேசி இலக்கங்கள் இந்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

அரச சேவையில் தற்போதுள்ள வினைத்திறன் இன்மை குறித்து இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் மூலம் புரிந்து கொள்ள கூடியதாக உள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரக் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button