News

உள்ளூராட்சி மன்றங்களின் தற்காலிக பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…!

உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு 180 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக பணியாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு (2023) ஒகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி முதல் சுமார் 8,435 பேர் 180 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக உள்ளூராட்சி மன்றங்களில்பணி புரிந்து வருவதாகத் கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 18 அன்று அந்த ஊழியர்களுக்கு தொழில் பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலானது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர், நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் ஆகியவற்றின் இராஜாங்க அமைச்சர் மற்றும் அதன் செயலாளர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அமைச்சரவையில் மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, உள்ளூராட்சி மன்றங்களில் வீதிப் பராமரிப்பு, குப்பை அகற்றல், நூலக சேவை, அலுவலக உதவிச் செயற்பாடுகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் சேவைகளை தொடர்ந்தும் பேணுவது அவசியமானதனால் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது நியாயமானது என அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், இந்த நியமனம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், பொதுக் கருவூலத்தின் சுமையை குறிப்பிட்ட அளவிற்கு அதிகாரிகள் தாங்கும் திறன் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 117 உள்ளூராட்சி சபைகளைச் சேர்ந்த 6678 ஊழியர்களுக்கு சபை நிதியிலிருந்து சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளின் அடிப்படையிலும், 159 குறைந்த வருமானம் பெறும் சபைகளில் 1757 ஊழியர்களுக்கு மத்திய திறைசேரியின் அடிப்படையிலும் நிரந்தர சேவை வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button