புதிய பதவியில் நாமல்: எதிர்கால அரசியலில் திருப்புமுனை
நாமல் ராஜபக்ச விரைவில் எதிர்கட்சி தலைவராக பதவியேற்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
குறித்த அறிவிப்பை அவர் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் சித்திரை மாதம் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில், பசில் ராஜபக்சவின் நடவடிக்கையின் கீழ் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி ஒன்று அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சிக்கு செல்லவுள்ளது.
அத்துடன், நாமல் ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவராகும் வாய்ப்புள்ளதுடன் ரணில் விக்ரமசிங்கவுடன் சஜித் பிரேமதாசவை இணைக்கும் நடவடிக்கை ஒன்றையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியினர், தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.